படகு வீட்டில் தங்கி இருந்த வெளிநாட்டுப் பெண் படுகொலை!

7.4.13

ஸ்ரீநகர் தால் ஏரியில் அமைந்துள்ள படகு வீட்டில் தங்கி இருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சாரா எலிசபத் கொலை செய்யப்  பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை காஷ்மீர் மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி  '' சாரா எலிசபத் தங்கி இருந்த அறை  உள்பக்கம் பூட்டப் பட்டு இருந்த நிலையில் உடைக்கப் பட்டுள்ளது. சாரா எலிசபத்தின் பக்கத்து அறையில் தங்கி இருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் நேற்று இரவு சாராவை தாக்கியுள்ளார்.

தம் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு பாஸ்போர்டை மட்டும் எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற அவரை காவல்துறை கைது செய்துள்ளது '' என்று தெரிவித்துள்ளார். உடைக்கப் பட்டு இருந்தது.

24 வயதான சாரா இரு மாதமாக படகு வீட்டில் தங்கி இருந்ததாக படகு வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சந்தேகத்துக்குரிய நெதர்லாந்து நபர் இரு  நாட்களுக்கு முன்னரே படகு  வீட்டுக்கு வந்துள்ளார். சாரா பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டு   பின்னர் படுகொலை செய்யப் பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

0 கருத்துக்கள் :