பெண்கள், சிறுவர்கள் இருக்கும் இல்லங்களில் பணிபுரிய ஆண்களுக்கு தடை: யாழ்

19.4.13

யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைக் கொண்டு இயங்கும் இல்லங்கள், நிறுவனங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார். கைதடி சிறுவர் இல்லம் ஒன்றில் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதுடன். மீண்டும் வெளியேறிய சிறுமியர்கள் இல்லத்திற்கு வருகை தந்தமையினை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவில் மீளவும் கைதடி சிறுவர் இல்லம் செயற்பட தொடங்கியுள்ளது. எனவே குடாநாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவு இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றைத் தடுப்பதற்காக பெண்கள், சிறுமியர்கள் உள்ள இல்லங்களில் ஆண்கள் பணிபுரிவது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.
  அவர் மேலும் தெரிவிக்கையில்,

துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் தடுப்பது அனைவரது பொறுப்பாகும். எனினும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களை யாரும் வெளிப்படுத்தாமல் இனங்காண முடியாது. மேலும் இனிவரும் காலங்களில் பெண்கள், சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இல்லங்கள், அவ்வாறான நிறுவனங்களில் எந்தப் பொறுப்பிலும் ஆண்கள் நியமிக்கப்பட முடியாது. அத்துடன் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஆண்களும் அனுமதிக்கப்பட கூடாது. எனினும் இந்த நடைமுறை இனிவரும் காலங்களில் இறுக்கமாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :