சரணடைந்த புலிகளின் முன்னனி தளபதிகள் அரசின் கையில்? மனைவி பிள்ளைகள் மர்மம்?

9.4.13

2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு. இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குச் சென்ற இச் சாட்சிகள் , பின்னர் விடுதலையாகி வெளியே வந்து தாம் நேரில் கண்டதை கூறியுள்ளார்கள். இதனை நேரில் பார்த்த சாட்சியங்களுக்கு அமைவாக இப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து இலங்கை இராணுவம் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் அறிக்கை ஒன்றின் படி, தம்மிடம் இனி எவரும் இல்லை என்று, இரகசிய முகாம்கள் என்று ஒன்று இயங்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அப்படி என்றால் பட்டியலில் உள்ள சரணடைந்த அவ்வளவு பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளது …. மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான செல்வராசா மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன் இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன் தளபதி லோறன்ஸ் தளபதி குமரன் விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா தமிழீழ அரசியல் துறைதுணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன் நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன் தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கி.பாப்பா தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள். தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன் தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள் தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன் தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன் தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம் தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன் தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன் தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன் தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் விஜிதரன் தளபதிகளில் ஒருவரான வீமன் வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம் சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சஞ்சை நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல் தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன் மாலதி படையணித் தளபதிகளில் ஒருவரான சுகி கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ் நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ் இது முழுமையான பட்டியல் அல்ல. மேலும் பலர் சரணடைந்திருக்கலாம் ஆனால் அவர்கள் பேர் விபரங்களும் இப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும். (jvpnews.com)

0 கருத்துக்கள் :