சொத்து தகராறு தாயை கொலை செய்த மகன்

4.4.13


சென்னை மாங்காடு பரணிபுத்தூர் பகுதியில் வளசரவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம் மனைவி கற்பகம். இவருக்கு வயது 65. இவர் இன்று அதிகாலை 6 மணியளவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டநிலையில் கிடப்பதாக கிடைத்த தகவ-ன் பேரில் வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில் செய்ததில் இந்த கொலையை செய்த நபர் கற்பகத்தின் மகன் என தெரிய வந்தது. கற்பகத்தின் மகன் சங்கரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது, இறந்து போன கற்பகத்திற்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் சுமதி 15 வருடங்களக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துள்ளார். சுமதியின் மகள் லட்சுமி என்பவருடன் கற்பகம் வசித்து வந்துள்ளார். சுமதியின் பெயரில் மாங்காடு பகுதியில் உள்ள 1/4 கிரவுட் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கக் கோரி சங்கர் தனது தாயை நீண்ட நாட்களாக மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை கற்பகம் வேலைக்கு சென்ற போது பின் தொடர்ந்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சொத்து தகராறில் கொலை நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் புலன் விசாரணை நடைபெறுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :