கடலில் விழுந்தது இந்தோனேஷிய விமானம்

13.4.13

இந்தோனேஷியாவின் பாலி பகுதியில் 130 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பாலி  தீவின் பொலிஸ்  தலைவர் ஆரிப் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவிற்கு சொந்தமான லையன் ஏர் போயிங் 737 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று பாலி தீவின்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 13 0 பேருடன்  ஜவா தீவினை நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளகியுள்ளது.ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும் நேரத்தில் திடீரென விலகி அருகே கடலில் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும் இதில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் எலும்பு முறிவுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே குறித்த விமானமானது கடலில் வீழ்ந்து கிடப்பது போன்ற வீடியோ காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. எவ்வாறாயினும் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவானதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

0 கருத்துக்கள் :