பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் கைது

19.4.13

2007-ம் ஆண்டு, முஷராப் தனது ஆட்சியின்போது அவசரநிலையை அமல்படுத்தி 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே இடைக்கால ஜாமீன் பெற்றிருந்த முஷராப் அதனை மேலும் நீட்டிப்பதற்காக உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது, அவரது ஜாமீன் நீட்டிப்புக் கோரிக்கை மனுவை நீதிபதி செளகத் அஜீஸ் சித்திக் நிராகரித்தார். முஷாரபை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கும் முன்னர், முஷாரபை அவரது பாதுகாவலர்கள் அவசர அவசரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போலீசாரும், துணை ராணுவப் படையினரும், அவர்களைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. நீதிமன்றத்திலிருந்து புறப்பட்ட முஷாரப் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியான சக் ஷாஸாத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். இதையடுத்து தனது பண்ணை வீட்டில் இருந்த முஷாரப்பை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.0 கருத்துக்கள் :