தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாராளுமன்ற தேர்தலில்

11.4.13


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’எல்லை தாண்டி சென்று மீன் பிடிப்பதால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகிறார்கள் என்று இந்திய மத்திய அரசே இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது என்பதை அதன் நட்பு நாடான இலங்கை அரசு மறந்துவிட்டதா? இந்தியாவின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது எத்தனை முறை இலங்கை கடற்படையினரால் எமது மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எல்லை தாண்டி வந்து இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை கைது செய்யும் இந்திய கடலோர காவல்படை எப்போதாவது அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளதா? ஏனென்னில் இந்திய அரசு உங்களை நட்பு நாடாக கருதுகிறது. ஆனால் நீங்கள் இந்திய மீனவர்களை எதிரி நாட்டு மீனவர்களாகவே கருதி தாக்குதல் நடத்துகிறீர்கள். இதனை தெரிந்தே இந்திய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் இதற்கெல்லாம் பதில் சொல்வார்கள்’’என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :