காங்கிரஸ் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள்

8.4.13

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நாமக்கல் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரு போஸ்டரில் அச்சிடப்பட்டு உள்ள வாசகங்கள் : ’’இலங்கை மண்ணில் சிங்கள ராணுவ வீரரின் தாக்குதலைத் தாங்கியது யாருக்காக? தமிழக மண்ணில் தலைவனின் உயிரைப் பறித்தது எதற்காக? தமிழக மக்களே சிந்திப்பீர்.’’ இன்னொரு போஸ்டரில் அச்சிடப்பட்டு உள்ள வாசகங்கள் : ’’அன்று ராஜீவ்காந்தி அவர்கள் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மூலம் தமிழர்களுக்கு தனி மாகாணம், முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தி ஈழத் தமிழர்களின் நலன் காத்தவரின் உயிரையே கொடியவர்கள் பறித்தனர். இன்று ஆயிரம் கோடி நிதி உதவி, 50 ஆயிரம் புதிய வீடுகள், தமிழர் நலன் காக்கும் முயற்சிகள் தொடரு கிறது. மக்கள் விரோத தீவிரவாதத்தை ஏற்க மாட்டோம்.’’

0 கருத்துக்கள் :