சிங்கத்தை சீண்டிப்பார்க்க வேண்டாம்:தமிழ் நாட்டுக்கு எச்சரிக்கை

5.4.13

சிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது என மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிங்கத்தை சீண்டி தமிழகம் காயமடையப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம் என தமிழகத்தை எச்சரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.

மெய்யான ஹீரோக்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இடைநடுவில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :