போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது

6.4.13

ஆப்பிரிக்க நாடான கினியா பிசாவ் நாட்டில் போதைப்பொருள் கடத்தும் கும்பல்கள் அதிகம் செயல்படுகின்றன. அதில் முக்கிய புள்ளியாக விளங்கும் அந்நாட்டின் முன்னாள் கப்பற்படை தளபதி நா சுட்டோ, கொகைன் போதைப்பொருளை லத்தின் அமெரிக்க நாடுகள் வழியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் மன்னனான முன்னாள் தளபதி நா சுட்டோ, கிழக்கு அட்லாண்டிக் கடலில் பாய்மரப் படகில் செல்வதாக செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து பனாமா நாட்டுக்கொடி பறந்த படகில் சென்ற முக்கிய குற்றவாளியான நா சுட்டோவை அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவருடன் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விமானம் மூலம் அழைத்து செல்ல உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த நா சுட்டோவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :