லண்டனில் தமிழீழ சுதந்திர சாசனம்: நாளை பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்!

13.4.13

தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை உலக தமிழ் சொந்தங்களுடனும், சகல தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்க உள்ளது.

தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வாக அனைத்து நாடுகளிலும் தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்து அறிமுகம் நடைபெற உள்ளது.

இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழ் அமைப்புக்களையும், ஊடகங்களையும் உள்ளடக்கி, நாளை ஞாயிறு மாலை (14/04/2013), 2:30 மணிக்கு ஒரு பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் உங்கள் அமைப்பு சார்ந்தும், ஊடகம் சார்ந்தும் கலந்து கொண்டு ஆரோக்கியமாக பயணிக்க வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.

விடயம்:

1) தமிழீழ சுதந்திர சாசனம் அறிமுகம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிமுக உரை

2) உங்கள் அமைப்புக்களின் நிலைப்பாடு: தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பாக சிலநிமிடங்கள் உங்கள் கருத்து.

3) உருவாக்கத்தில் உங்களின் பங்களிப்பு.

4) தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வு.


இடம்: Northolt Village Community Centre,

The Manor House, Ealing Road, Northolt UB5 6AD

தொடர்புகளுக்கு:

தயாபரன் அரசியல் துறை : 07711558123

கவிராச் ஊடக துறை : 07960412227

தாயக விடுதலை நோக்கி ஒன்றிணைவோம். செயற்படுவோம்.

நன்றி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்......
தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் :
www.tamileelamfreedomcharter.org/

0 கருத்துக்கள் :