பொஸ்டன் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொலை!

19.4.13

பொஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். வோட்டர் டவுன் பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி மோதலையடுத்தே அவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக குறித்த சந்தேக நபர்களின் படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மசாசூசெட்ஸ் தொழிநுட்ப கல்லூரியில் வைத்து பொலிஸார் ஒருவரை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சுட்டுக்கொன்றிருந்தனர். பின்னர் காரொன்றை துப்பாக்கி முனையில் அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். எனினும் கார் சாரதியை பத்திரமாக வேறொரு இடத்தில் இறக்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த காரை பொலிஸாரால் பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பொலிஸார் மீது வெடிபொருட்களை வீசியுள்ளனர். மேலும் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒரு சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வோட்டர்டவுன், நிவ்டவுன், வோல்தம், பெல்மொண்ட், கேம்பிரிஜ் பகுதிகளைச் சேர்ந்த மக்களை வீட்டினுள்ளேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 கருத்துக்கள் :