தொலைபேசி ஒட்டுக் கேட்கும் கருவிகள் கொள்வனவு செய்த புலனாய்வுப் பிரிவு!

28.4.13

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வுப் பிரிவு இந்த அதி நவீன கருவிகளை கொள்வனவு செய்துள்ளது.
நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கக் கூடிய வகையில் இந்த கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன.
தொலைபேசி சேவை வழங்குனரின் அனுமதியின்றியே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் எனவே இதற்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட முடியும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜய கமகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் உத்தரவிற்கு அமையவே நபர் ஒருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :