சுவிட்சர்லாந்துப் பிரஜை ஹப்புத்தளையில் மரணம்

24.4.13

சுவிட்சர்லாந்திலிருந்து ஹப்புத்தளைக்கு வந்திருந்த உல்லாசப்பயணி ஒருவர் ஹப்புத்தளையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார். சம்பவ தினமான திங்கட்கிழமை காலை உணவை உட்கொண்டதன் பின்னரே மயங்கி வீழ்ந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன் வருகைதந்திருந்த மேற்படி நாட்டைச் சேர்ந்த விலிஸ்வர் (வயது 83) என்ற நபரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். உல்லாசப் பயணிகளாக வந்திருந்த மேற்படி தம்பதியர் ஹப்புத்தளை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டுப் பிரஜை என்பதால் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது:

0 கருத்துக்கள் :