மனித உரிமை மீறல் ஆதாரங்கள் நிரூபித்தால் விசாரணை ; ஜனாதிபதி

23.4.13

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் விசாரணை நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. எனவே அவ்வாறு இராணுவத்தினரால் மனித உரிமை மீறப்பட்டதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று  ஊடக நிறுவகனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் அதனைப் பாதுகாப்பதற்குமே அரசாங்கம் விரும்புகின்றது. சாதாரண குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தப்படும்.

அத்துடன் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும் கடந்த வாரம் அமெரிக்கா வெளியிட்டிருந்த மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :