தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாம்!

21.4.13

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா இல்லையா என்பதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை.
எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :