வடஇந்தியாவில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க இன்னொரு போராளி

29.4.13

தமிழீழ பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டாலும், இது குறித்து வடநாட்டவர்களுக்கு இன்னும் விழுப்புணர்வு ஏற்படவில்லை என்பது தான் உண்மை.
மாணவர் போராட்டம் உச்சத்தில் இருந்த போது தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தந்த ஒரே வடநாட்டு அரசியல்வாதி திரு.சோம் பிரகாஷ் சிங் தான் .
இவர் பீகாரில் இருந்து தமிழகத்திற்கு வந்து மாணவர்களுக்கு தனது ஆதரவை நல்கினார். இவர் கூறியது நமக்கு பெரும் வியப்பை தந்தது. இவருக்கே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஈழப் பிரச்சனை பற்றி தெரியும் என்றார்.
தெரிந்தவுடன் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜபக்சே இந்தியா வந்த போது அவனுக்கு கறுப்புக் கொடு காட்டி கைதும் ஆனார் .
இவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தது தமிழகத்தில் வசிக்கும் சீனிவாஸ் திவாரி என்ற நண்பர் தான்.
இதன் தொடர்ச்சியாக சீனிவாஸ் திவாரி பல முறை வடநாடு சென்று அங்கிருக்கும் மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் வாதிகளை சந்தித்து ஈழப் பிரச்சனைக்காக ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இப்போது டெல்லியில் வசிக்கும் கருத்துப் போராளி ஓவியர் அசீம் திரிவேதியிடம் ஈழப் பிரச்சனை பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அசீம் இப்போது தான் ஈழப் பிரச்சனை குறித்த உண்மையை அறிந்துள்ளார் .
தமிழர்களுக்கு இனி தன்னால் இயன்ற ஆதரவை தருவதாக உறுதி அளித்துள்ளார். இவரது ஓவியம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது .
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே அசீம் அவர்களின் லட்சியமாகும் . அதற்காக இந்திய பாராளுமன்றத்தை கேலி செய்யும் விதமாகவும் , அரிசியல்வாதிகள் இந்திய அன்னையை துகில் உரிவது போலவும் ஓவியம் வரைந்து இந்திய அரசின் கோபத்திற்கு ஆளானார்.
இதனால் காங்கிரஸ் அரசு அசீமின் மேல் தேசத் துரோக வழக்கு தொடுத்தது. இந்தியாவில் அஜ்மல் கசாப், அணுஉலைப் போராளி உதயகுமார் அடுத்து இவரின் மேல் தான் இத்தகைய கடும் வழக்கை போட்டது இந்திய அரசு.
எனினும் அசீம் திரிவேதிக்கு இந்தியா முழுவதும் இருந்து பெரும் ஆதரவு திரண்டதால், அவர் வழக்கில் இருந்து தப்பினார். அசீம் திரிவேதியின் இத்தகைய துணிச்சலான சிந்தனையால் கவரப்பட்டு இளைஞர்கள் பெரும் அளவில் அவரது விசிறிகளாக உள்ளனர் . அதனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனை இவரின் மூலமாக எளிதாக இந்திய இளைஞர்களை சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய கருத்துப் போராளி இப்போது தமிழ் ஈழத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது .

0 கருத்துக்கள் :