இலங்கைக்கு எதிராக மாணவர் அமைப்பினர் கையெழுத்து இயக்கம்

6.4.13

"தி காம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' என்ற மாணவர் அமைப்பின் தில்லி பிரதேச பிரிவு' சார்பில் வெள்ளிக்கிழமை இந்த இயக்கம் நடைபெற்றது.
இது குறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:இலங்கை தமிழர்களை போர் என்ற பெயரில் அந்நாட்டு அரசு கொன்று குவித்தது. அங்கு வாழும் முஸ்லிம்களை மத வழிபாடு செய்ய விடாமல் புத்த மதத்தினர் தடுத்துத் துன்புறுத்தி வருகின்றனர்.
மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது புத்த மதத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தாக்குதலில் 40 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 61 பேர் காயம் அடைந்தனர்.

அமைதி, அன்பை போதித்த புத்தர் பெயரால் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அட்டூழியம் செய்து வருவதை இந்தியா கண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :