கோத்தபாய யாழ். விஜயம்

19.4.13

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். சாவகச்சேரியிலுள்ள 52ஆவது படையணி தலைமையகத்தில் அன்றைய தினம் மாலை நடைபெறும் வைபவத்தில் கலந்துகொண்டு பாடசாலை மாணவர்கள் 1500 பேருக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகங்களை வழங்கி வைப்பார். அத்துடன் அங்குள்ள படை தளபதிகளை சந்தித்து சமகால சூழல் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

0 கருத்துக்கள் :