முழு இராணுவப் பலத்துடன் புலிகளால் மீண்டெழ முடியாது

17.4.13


முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ் யுனிட் இதழ் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இப்போது விடுதலைப் புலிகளின் மீண்டெழுகை சாத்தியமற்றது. ஆயுதப் உள்நாட்டில் கிளர்ச்சி செய்ய முனைவோருக்கு வெளிநாட்டு சக்திகளின் உதவிகள் கிடைத்தால், போராட்டக் குழுவான்று எழுச்சி பெறக் கூடும். இத்தகைய வெளிநாட்டு முயற்சிகளை தடுக்க பொருத்தமான வலையமைப்புகளை நாம் கொண்டிருக்கிறோம். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இத்தகைய கிளர்ச்சிகளில் ஈடுபடுவார்கள் என்று சிறிலங்கா இராணுவம் நம்பவில்லை. அவர்களில் பெரும்பாலாலும் எல்லோரும் அமைதியான சிறிலங்காவையே விரும்புகின்றனர். எனினும் வெளிநாட்டில் விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :