மனிதர்கள் மட்டுமல்லாது தற்போது விலங்குகளும் மாட்டிக்கொள்ளும் பரிதாப நிலை

16.4.13

ஏ9 வீதிகளில் கண்மூடித்தனமான வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதால் மனிதர்கள் மட்டுமல்லாது தற்போது விலங்குகளும் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வரும் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலை தொடர்ந்துகொண்டே செல்கின்றது..... யாழ்பாணம்-கொழும்பு இடையேயான பஸ் பிரயாண சேவைகள் இரவு வேளைகளில் தான் அதிகளவில் இடம்பெறுகின்றன. இரவு நேர விபத்துக்களில் மனிதர்கள் தப்பிக்கொண்டாலும் பாவம் ஜந்து அறிவு கால்நடைகள்தான் பெரும்பாலும் மாட்டிக்கொள்கின்றன.இரவுவேளைகளில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக வந்து வீதிகளில் உறங்குகின்றன.இதனால் வேகக்கட்டுப்பாட்டை மீறி வரும் வாகன சாரதிகள் கால்நடைகளை தாக்கி செல்லும் அவல நிலையினை காணமுடிகின்றது.குறிப்பாக இத்தகைய விபத்துக்களை இயக்கச்சி,மாங்குளம்,கனகராயன்குளம் மற்றும் புளியங்குளம் போன்ற பகுதிகளில்அதிகளவில் காணமுடிகின்றது.இதனால் இந்தப்பகுதிகளை சேர்ந்த மக்கள் சாரதிகளின் பொறுப்பற்ற இந்த செயற்பாட்டிற்கு மிகுந்த வருத்தம் தெரிவிப்பதொடு உரியவர்கள் தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றனர்

0 கருத்துக்கள் :