கறுப்பு ஜூலை இம்முறை முஸ்லிம்களுக்கு எதிரானதாக அமையும்?- பௌத்த பிக்கு அச்சம்

14.4.13

கறுப்பு ஜூலை இந்த வருடத்திலும்  உருவாக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் பௌத்த பிக்கு ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கந்த தம்மாநந்த தேரர் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

வருடந்தோறும் கறுப்பு ஜூலையை இலங்கை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்த வருடம் அது முஸ்லிம்களுக்கு எதிரான கறுப்பு ஜூலையாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கல்கந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தோல்விக்கண்டுள்ளன.

இதனால் இலங்கையில் இன்று சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என்று கல்கந்த தேரர் எச்சரித்துள்ளார்.

0 கருத்துக்கள் :