இந்தியர்கள் போல இலங்கையர்கள் தரம் தாழ்ந்து போக மாட்டார்கள்: ரணவக்க

11.4.13

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்ற பயணிகள், பிக்குகள், கலைஞர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமாக நடத்தப்பட்டமைக்கு பதிலாக அங்கிருந்து இங்கு வருபவர்கள் நடத்தப்படமாட்டார்கள் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையர்கள் அவர்களைப் போல தரம் தாழ்ந்து போகமாட்டார்கள் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் குறித்து கட்சியின் அலுவகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இந்தியாவின் பகுதியல்லவெனவும், இது சுயாதீன நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :