பிறந்தவுடன் சாக்கடையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

27.4.13


புதுக்கோட்டையில் பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் அந்த குழந்தை தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில், நிஜாம் காலனியில் ஒரு வீட்டின் முன்பாக சாக்கடையில் அழுதபடி இருந்தது. அந்த வீட்டை சேர்ந்தவர்கள் குழந்தையை மீட்டு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். மீட்கப்பட்ட குழந்தை புதுக்கோட்டை அரசு இராணியர் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நீண்ட நேரமாக சாக்கடை நீரில் இருந்ததால் குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற இறக்கமில்லா தாயை போலிசார் தேடி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :