அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம்!

7.4.13


தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துச் செய்த சிங்கள அரசானது முள்ளிவாய்க்கால் பெருவெளியில் தமிழினத்தை மட்டுமல்ல தமிழீழ இலட்சியத்தினையும் புதைகுழியில் போட்டுப் புதைத்து விட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கும் இவ்வேளை உலகத் தமிழர்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு எதிரான தீவீர செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது இலங்கை கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகையொன்றின் சனிக்கிழமைய பதிப்பில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருவதோடு புலத்து புலிகள் சிங்கள தேசத்துக்கு எதிராக தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்கி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் கேபி குழுவினரின் தமிழீழ சுதந்திர சாசனம் எனும் விசமப் பிரச்சாரங்களை புலம்பெயர் தமிழர்களை நோக்கி தமிழ்த் தேசியத்தின் பெயரால் முடுக்கி விட்டுள்ளதோடு இலங்கையின் இறையாண்மைக்கு தமிழீழ சுதந்திர சாசனம் எதிரானதென்ற சர்வதேச பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதற்க என Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் தனது கைககூலிகளை களமிறக்கியுள்ள சிங்கள அரசானது தற்போது தமிழீழ சுதந்திர சாசனத்தினை இலக்கு வைத்து விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள அரசினது அவர்களது கைக்கூலிகளினதும் இத்தகைய சதி வலைப்பின்னல்களை தகர்த்தெறிந்து மலர இருக்கும் தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை உலகத்தமிழர்கள் வரைந்து அதனை உலகின் முன் பெரும் வரலாற்று முரசறைவாக வெளிப்படுத்துவார்கள் என தமிழின உணர்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் media@tgte.org

0 கருத்துக்கள் :