கடித்துச் சண்டையிட்ட யாழ்ப்பாண வீர இளைஞர்கள்

1.4.13

யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியார் மடத்தடியில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற சண்டையில் இரு குழுக்களும் ஒருவரையொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரு இளைஞர் குழுக்களும் ஒன்றாக மது அருந்தியதாகவும் இதனைத் தொடர்ந்து பலம் மிக்கவர் யார்? என்பதை பார்க்க கையை மடிக்கும் போட்டியில் ஈடுபட்டதாகவும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் இரு குழுக்களும் மோதிக் கொண்டதாகவும் தெரிய வருகிறது. இதன்போது ஒருவருக்கு தலை, நெஞ்சு மற்றும் கன்னத்தில் கடி காயங்கள் ஏற்பட்டதால் கோபமடைந்த அக்குழுவினர் அதற்குப் பழி தீர்க்கும வகையில் மற்றைய குழுவைச் சேர்ந்த ஒருவரின் காதைக் கடித்து காயப்படுத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட குழுவினர் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்கள்

0 கருத்துக்கள் :