அரசியல் களத்தில் முக்கிய மூன்று பெண்கள் கூட்டு

1.4.13


தேசிய அரசியல் களத்தில் முக்கிய மூன்று பெண் பிரபலங்களை இறக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா ஆகிய மூவரையுமே கூட்டாகக் களமிறக்குவதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. இனிவரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் கருத்திற்கொண்டே எதிர்க்கட்சிகளின் முக்கிய புள்ளிகள் சிலர் இவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது. எது எப்படியிருந்தபோதிலும், அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள அந்த மூவரும் அரசியல் களத்தில் நிச்சயம் குதிப்பர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இது குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த திரிசூலப் பெண்கள் குழு அரசியலில் ஈடுபடும் பட்சத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு கடும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். அரசியலுக்கு வரும் முன்னோடியாகவே முன் னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், முன்னாள் பிரதம நீதியர சர் ஷிராணியும் சட்டத்தரணிகள் சங்கக் கூட்டத் துக்கு இணைந்து வந்தனர் என்றும் அரசியல் களத்தில் பேசப்படுகின்றது. சந்திரிகா அம்மை யாருக்கு அரசியல் களத்தில் முழு அனுபவம் இருந்தாலும், ஷிராணிக்கும் அனோமா பொன் சேகாவுக்கும் அரசியல் களம் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :