ஆர்ஜெண்டினா வெள்ளப்பெருக்கில் 57 பேர் பலி

6.4.13

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் பியுனெசரஸ் மாகாணத்தில் சில நாட்களாக பலத்த காற்றுடன் பேய்மழை கொட்டியது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லா ப்ளாட்டா மற்றும் தலைநகர் பியுனெசரஸ் நகரங்கள் மூழ்கின. இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வீட்டின் கூரைகள், மரத்தின் மீதும் ஏறிக்கொண்டனர். இருந்தும் 56 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்து போயினர். இதில் சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மீட்புக்குழுவினர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

0 கருத்துக்கள் :