தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் 40 பேர் சென்னையில் கைது

25.4.13

சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் மாணவர்கள் உள்ளே நுழைந்து தமிழீழ ஆதரவு செய்தியை உலகிற்கு சொல்ல வேண்டும் என எண்ணி இருந்தனர்.
அனைவரும் தமிழீழ விடுதலை வேண்டும் என வாசகம் அடங்கிய சட்டையை அணிந்து கொண்டு உள்ள செல்வதாக திட்டமிட்டனர். அதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மாணவர்கள் செய்திருந்தனர்.
ஆனால் மாணவர்களின் தொலைபேசி எண்ணை தந்திரமாக ஒட்டுக் கேட்ட காவல் துறை மாணவர்கள் கிரிக்கெட் திடலுக்கு அருகே வந்த போது, 40 மாணவர்களை கைது செய்தது.
சுமார் 200 காவல்துறையினர் மாணவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி மாணவர்களை கைது செய்வதாக கூறியுள்ளது காவல்துறை. கைது செய்த மாணவர்களை எழும்பூர் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டனர்.
இதனால் இன்று நடக்கும் போட்டி முடிவடைந்த பின் தான் மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கனவே இந்து நாளிதழில் பிரபாகரன் என்ற மாணவர் தனது தொலைபேசியை காவல்துறை ஒட்டுக் கேட்பதாக புகார் கூறியிருந்தார். அது இன்று நிரூபணம் ஆகி உள்ளது.
மேலும் மாணவர்களை கைது செய்வதற்கு காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை. காரணம் மாணவர்கள் எந்தவித போராட்டம் செய்யவும் திட்டமிட வில்லை. மாணவர்களின் அனுமதி சீட்டையும் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.
சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககார தலைவராக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளையே காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :