அல் கொய்தா தலைவன் உள்பட 4 பேருக்கு ஈராக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

1.4.13


ஈராக் நாட்டில் வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை அந்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்க தூதராக அதிகாரிகள் ரத்து செய்யும்படி கோரினர். இதனையொட்டி, 2003ம் ஆண்டு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் தலை விரித்தாடியதால் மீண்டும் 2004ம் ஆண்டு முதல் மரண தண்டனை நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னர், ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமைச்சரக அலுவலகங்கள், தூதரகங்கள், மசூதிகள், சர்ச்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை திட்டம் தீட்டி, நிறைவேற்றிய பாக்தாத் மாகாண அல் கொய்தா தலைவன் முனாப் அப்துல் ரஹீம் அல் ராவி, கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டான். அவன் மீதும் அவனது கூட்டாளிகள் 3 பேர் மீதும் பாக்தாத் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் 4 பேரும் இன்று தூக்கிட்டு கொல்லப்பட்டதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்தது.

0 கருத்துக்கள் :