3 ஆசிரியைகள் மீது ஆசிட் வீச்சு

3.4.13

உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேர், பள்ளியில் பணியை முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைகிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், ஆசிரியைகள் மீதும் ஒரு உடன் வந்த மாணவன் மீதும் ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றனர். ஆசிட் வீச்சில் ஆசிரியைகள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மாணவன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினான். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக ஆசிரியைகள் மூவரும் டெல்லிக்கு கொண்டு செல்லப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிருக்குப் போராடும் ஆசிரியைகள் மூவரும் சகோதரிகள் என்றும் அந்த மாணவன் இவர்களின் சகோதரன் என்றும் தெரிய வந்துள்ளது. ஆசிட் வீசியவர்கள் யார்? எதற்காக? இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் பெண்களின் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால் இந்த சட்டத்தில் ஆசிட் வீச்சில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :