குடிபோதையில் 3 குழந்தைகளை கொன்ற தாய்

1.4.13

ஆந்திர மாநிலத்தில் நாபெட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, குடிப்பழக்கம் இருந்து உள்ளது. இவரது கணவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று போதையில் இருந்த அந்தப் பெண், தன்னுடைய 2, 6 மற்றும் 7 வயதுள்ள குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்தார். பின்னர் அவரும், அதே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி மக்கள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். எனினும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தன. அந்தப் பெண் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்துக்கள் :