ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்குப் பெண்! (Video)

13.3.13


இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறிகள் கூட இல்லாது, கடும் நுளம்புக் கடிகளுக்கு நடுவே, உண்ணாநோன்பு இருக்கும் 8 மாணவர்களும், 1 மாணவியும், ஏராளமான தமிழ் உணர்வாளர்களும் இரவைக் கழித்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது. அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உறுதியாக உறுதியாக இருக்கிறார். விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார். பட்டினிப்போரில் ஈடுபட்டுவரும் மாணவி தோழர் மோனிசாவிடம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட பேட்டியே இதுவாகும், இவர்களுக்குத் துணை நிற்போம். இவர்கள் மனதில் இருக்கும் உணர்வுத் தீ அணையாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. என்று தமிழ் உணர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :