சென்னையில் சரமாரி தாக்குதல்! அலறியடித்து ஓடிய பிக்கு (Video & Photo)

18.3.13

இலங்கையில் இருந்து தமிழ்நாடு சென்ற புத்த பிக்கு மீது சென்னை மத்திய ரயில் நிலையத்தில் மக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனை அடுத்து பிக்குகளும் அவர்களுடன் வந்தவர்களும் தப்பியோடியுள்ளனர். இவர் இலங்கையின் கண்டியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 20 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றவர் ஆவார். ஆன்மீக சுற்றுலாவிற்கு சென்று விட்டு ரயிலில் சென்னை திரும்பிய போது இந்த தாக்குதல் நடத்தபபட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா வந்த மற்றவர்கள் விமானம் மூலம் இன்று இலங்கை திரும்புகின்றனர். புத்த பிக்கு கருத்து தெரிவிக்கையில்: இந்தியாவில் உள்ள புத்தகாயாவை பாரவையிட வந்தோம் ஆனால் தற்போது மக்களின் தாக்குதலுக்கு நாங்கள் உள்ளகியுள்ளோம் என தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக தமிழக மாணவர்களாலும் மக்களாலும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் இந் நிலையில் இலங்கையில் இருந்து வரும் சிங்களவர்கள் புத்த பிக்குகள் மீது தாக்குதல்களும் அதிரித்து வருகின்றது. அண்மையில் தஞ்சாவூரில் புத்த பிக்குகள் மீது தாக்குதல் நடாத்திய மூவர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இலங்கை அரசு சிங்கள மக்களுக்கு இந்திய பயண எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :