இலங்கை பிரச்சனை தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியர்களின் பிரச்சனை சல்மான குர்ஷித்

7.3.13

மக்களவையில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் தமிழக உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான குர்ஷித், 27 ஆண்டுகளாக இலங்கைப் பிரச்சனையை தீர்க்க இந்திய அரசு உதவி வருகிறது என்று கூறினார். இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், உண்மையை ஏற்றுக் கொள்ள பரந்த மனம் வேண்டும் என்று கூறினார். கடந்த காலத்தை பின் தள்ளி நாம் முன் செல்ல வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கை பிரச்சனை தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியர்களின் பிரச்சனை என்று கூறினார். இன்று நாம் செய்யக் கூடியது நாளை நமக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பிறநாட்டின் இறையாண்மையில் தலையிடுவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை என்று கூறிய சல்மான் குர்ஷித், எந்த நாட்டையும் துண்டாடுவதை நாம் ஆதரிப்பதில்லை என்று கூறினார். நட்பு நாடாக இருந்தாலும் செய்வது தவறு எனில் சுட்டிக்காட்டும் துணிவு இந்தியாவிற்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். சுயேச்சை குழு விசாரிக்க வேண்டும் சுயேச்சையான குழுவை கொண்டு இலங்கை மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

0 கருத்துக்கள் :