இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்!

1.3.13

இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பின் 5ம் நாள் காட்சிகள் வழமைபோல் ஆரம்பித்து,இன அழிப்புப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இக்காட்சிகளை பார்வையிட்ட பல இன பெண்கள் வாய் பொத்தி மௌனித்து, கண்ணீர் மல்கினார். நாகரீக உலகில்,அநாகரீகமாகவும்,காட்டுமிராண்டித் தனமாகவும்,மனித நேயம் அறவே அற்ற,இரத்த வெறிபிடித்த,கொடிய இலங்கை அரசைக் கண்டிக்கத்தவறிய, ஐ.நா.வையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். மானிட வரலாற்றில் இப்படி ஒரு இனப்படுகொலை இதுவரை நிகழ்ந்ததில்லை.இது மிகவும் கண்டிக்கத்தக்கதென,தங்களின் ஆதங்கங்களை முன்வைத்தார்கள். இன்றும் பல இரத்த உறவுகள் சகல உதவிகளையும் செய்தார்கள். வழமைபோல் காலை 7.30மணி தொடக்கம் மாலை 6மணிவரைக்கும் இன அழிப்பு கண்காட்சிகள் நிகழ்ந்தன. நாளையும் இதே நேரத்திற்கு, இன அழிப்பு தொடர்பிலான கண்காட்சிகள் இடம்பெறும் என்பதனை, ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.கஜன் அவர்கள் அறியத்தருகின்றார்.

0 கருத்துக்கள் :