கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது மத்திய அரசு

19.3.13


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என்று தி முக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்த கருணாநிதி, மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் டெசோ தொடர்ந்து ஈடுபடும் என்றும், தமது தலைமையிலான டெசோ குழு ராஜபக்சேவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர்கள் விலகல் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியது. ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து டெல்லியில் திமுக மத்திய அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்தனர். பரிசீலிக்கத் தயார் திமுக கூறியது போன்று தீர்மானம் கொண்டுவந்தால் முடிவை பரிசீலிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் கொண்டு வருவதற்கு மார்ச் 21 வரை கால அவகாசம் உள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :