இலங்கையின் கோரிக்கையை நிராகரித்தது சீனா

4.3.13

இலங்கை விடுத்த 500 மில்லியன் டொலர் கடனுதவிக் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. பெற்றோலியப் பொருட்களின் கொள்வனவுக்காக இலங்கை இந்தக் கடனுதவியை சீனாவிடம் கோரியிருந்தது. ஆனால், இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கான கடன்களை மட்டுமே வழங்க முடியும் என்று சீனா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடந்த ஆண்டு இந்தக் கடனுதவிக் கோரிக்கையை இலங்கை விடுத்ததாகவும், எனினும் அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கான கடனுதவியையே சீனா வழங்கியுள்ளதாகவும் இலங்கை நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :