மதுரையில் இளைஞன் தீக்குளிப்பு- சம்பவ இடத்திலேயே பலி: அஞ்சலி செலுத்த வைகோ விரைவு

18.3.13


மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் இன்று மாலை 7.30 மணி அளவில் ஒரு இளைஞர், முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு, ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார். ஈழத்திற்கு ஆதரவாகவும், சிங்களத்திற்கு எதிராகவும் அவர் கோஷம் எழுப்பியுள்ளார். தீவைத்துக் கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் மருத்துவமனை வாசலில் குவிந்து வருகின்றனர். தீக்குளித்து பலியான இளைஞர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்நிலையில், தீக்குளித்து இறந்தவர் தீவிரவாதி என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் தீக்குளித்த இளைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வைகோ வருகை மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு, ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து பலியான இளைஞனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத்திற்கு ஆதரவாகவும், சிங்களத்திற்கு எதிராகவும் அவர் கோஷம் எழுப்பி தீக்குளித்த இளைஞனின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :