தமிழீழம் அல்லது எமக்கு தனி தமிழ்நாடு மாணவர்கள் ஆவேசம்!

20.3.13

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தினர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் இன்று காலை கல்லூரி வாயி-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்கள் போராட்டத்திற்கு தயாராகும்போது, கல்லூரியின் முதல்வரும், காவல்துறையினரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி சாலை மறியல் செய்யக் கூடாது. கல்லூரியின் உள்ளேயே கோஷம் போட்டுவிட்டு கலைந்து போக சொல்லி மிரட்டினர். மாணவர்கள் அவர்களிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கல்லூரி உள்ளேயே உட்கார்ந்து ராஜபக்சே மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை போட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். அந்த மாணவர்களிடம் பேசியபோது, ஈழத் தமிழர்களுக்கு சுய அதிகாரம், சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். அவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்காமல் இலங்கை நட்பு நாடு என்று சொல்-க்கொண்டிருந்தால் மாணவர்கள் நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம். ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். இது இல்லையென்றால் எங்களின் தமிழ்நாட்டை பிரித்து கொடுங்கள். நாங்கள் தனி தமிழ்நாடு அமைத்துக்கொள்கிறோம் என்று ஆவேசமாக கூறினர்.

0 கருத்துக்கள் :