இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய மத்திய அரசு தீர்மானம்

16.3.13

ஐ.நா. மனிதவுரிமைக் கவுன்சிலின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மற்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் முக்கியமாகக் கொண்டு ஆராயப்பட்டதாகவும் மேலும் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வதா.. வேண்டாமா என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் எதிர்வரும் திங்கட் கிழமையே முறைப்படி அறிவிப்பார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துக்கள் :