பாலச்சந்திரன் படுகொலை இலங்கையின் கோர முகத்தை காட்டுகிறது : பா.ஜ.க குற்றச்சாட்டு

7.3.13

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார் அனுமதி அளித்தார்.
  இந்த விவாதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு துவக்கி வைத்து பேசினார், மேலும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி உறுப்பினர்களும் விவாதத்தில் பேச இருக்கின்றனர். இலங்கைக்கு எதிரான தீர்மானம் மற்ற நாடுகள் தங்களின் நிலையை உறுதி செய்துள்ள நிலையில், இந்திய அரசு மட்டும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மீதான கொடுமைகள் இன்றும் தொடர்கிறது :
 டி.ஆர்.பாலு விவாதத்தை தொடக்கி வைத்த பேசிய டி.ஆர்.பாலு, இலங்கையில் பல ஆண்டுகளாக நடக்கும் போரால் தமிழர்களின் வாழ்க்கை உடைந்து நொறுங்கிப்போய் உள்ளதாக கூறினார். இலங்கைப் போரால் 90,000 தமிழ் பெண்கள் கணவரை இழந்து விதவை ஆகியுள்ளதாகவும், 1,20,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக பாலு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மீதான கொடுமைகள் இன்றும் தொடர்கிறது. என்றும் டி.ஆர்.பாலு வருத்தம் தெரிவித்தார்.
டி.ஆர்.பாலு பேச்சு
தனி ஈழம் கோரிக்கை தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். அனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. ஆனால் தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் நாங்கள் தனி ஈழம் கோரிக்கை மீண்டும் எழுப்பப்படும். தற்போது இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம்.

இந்திய அரசின் நிலை என்ன என்பதே பல்வேறு நாடு தலைவர்களின் கேள்வி

இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐ.நா சபையில் வழங்கியுள்ளோம் . டெசோ தீர்மானத்தை ஒப்படைத்த போது இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கைத் தமிழருக்கு உதவ இந்திய அரசு என்ன முயற்சி வருகின்றது என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். டெசோ மாநாடு தீர்மானம் பல்தேறு நாட்டு தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்திய அரசின் நிலை என்ன என்பதே பல்வேறு நாட்டு தலைவர்களின் கேள்வியாக இருந்தது.

கனத்த இதயத்துடன் விவாதத்தில் பங்கேற்கிறேன் : யஸ்வந்த் சின்ஹா

கனத்த இதயத்துடன் விவாதத்தில் பங்கேற்பதாக யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலகையுடன் பிரச்சனைகளை கையாள்வது இந்தியாவிற்கு சுலபம் என்று அவர் தெரிவித்துள்ளார். பதுங்கு குழியில் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் பாலச்சந்திரன் சில நிமிடங்களில் குண்டு பாய்ந்து இறந்துள்ளான் என்று கூறிய அவர், பாலச்சந்திரன் படுகொலை இலங்கையின் கோர முகத்தை காட்டுகிறது என்று விமர்சனம் செய்தார்.

இந்தியாவே முழுக் காரணம்

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே முழுக்காரணம் என்று யஸ்வந்த் சிஹா தெரிவித்துள்ளார். இலங்கை அதிபரும், அவரது சகோதரர்களும் முழு அச்சாக இருந்து செயல்பட்டுள்ளனர் என்று இலக்கை புத்தகத்தை காட்டி சின்ஹா தெரிவித்தார். இந்தியாவின் வெளியுறவுத் செயலரும், உள்துறைச் செயலரும் இலங்கைக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஈழப் போரில் இலங்கை தந்திரம்

புதுடெல்லி: இலங்கையில் விடுதைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு தந்திரமாக செயல்பட்டுள்ளது இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இறுதிக் கட்ட போரை நிகழ்த்தியது இதனால் இந்தியக் கட்சிகள் போரை கண்டு கொள்ளவில்லை ஈழப் போர் குறித்து மத்திய அரசு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ போர் முடியும் வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தலைவர், மகன் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். சொல்ல முடியாத மனிதாபிமானமற்ற செயல்களை இலங்கை ராணுவம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :