கோவையில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாகிறது

16.3.13

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா.சபை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டியும் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமாகி வருகின்றன. ஒ ஒண்டிப்புதூரில் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 38 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் 5-வது நாளாகவும், சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 6-வது நாளாகவும் தொடர்கிறது. இதனிடையே, கோவையைச் சேர்ந்த 3 தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் வேறு சில கல்லூரிகளின் மாணவர்களும் இலங்கைக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் வந்து, தங்களது ஆதரவுகளைத் தெரிவித்தனர். காந்திபுரம் சந்திப்பு சாலையில் சட்டக்கல்லூரி மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து மனித சங்கிலி மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.

0 கருத்துக்கள் :