திருப்பி அடிப்பதே தலைச்சிறந்த தற்காப்பு

18.3.13


சிங்களப் பிக்குகளை விரட்டியத்த நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க., விடுதலைத் தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட அமைப்புத் தோழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்களும், ஈழத்தமிழர்கள் பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் இந்நடடிவக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சிறு விளக்கம் அளிப்பதைக் கடமையெனக் கருதுகிறோம். இனவெறியை தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ள நாட்டை தண்டிக்கும் வகையில் அந்நாட்டுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ளும் முறை உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத் தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து செயல்படுத்தி வந்தன. நாம் சிங்களர்களை விரட்டிய அதே நடவடிக்கையை தான் இவ் அரசுகள் அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டன. இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தற்போது, தமிழக அரசு இதை செயல்படுத்தாத நிலையில், அதை இனஉணர்வுள்ள நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எனவே தான், இலங்கையில் இருந்த வரும் சிங்களர்களும், அவர்தம் உற்பத்திப் பொருட்களும் தமிழகத்தில் நுழையக் கூடாது என்பதில் நாம் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் காலனியாக தற்போது தமிழ்நாடு நீடிக்கும் நிலையில், நமக்கென ஓர் அரசு இருந்தால் இதே போல் அரசு ரீதியாக சிங்களர்களுக்கு விசா கொடுக்க மறுத்தும், அவர்களது பொருட்களைத் தடை செய்தும் நாம் இதை செயல்படுத்தியிருக்க முடியும். இன்றைக்கு ஓர் அரசு இல்லாத நிலையில், ஓர் இனஉணர்வுள்ள அரசு என்ன செய்யுமோ அதைத் தான் தமிழின உணர்வாளர்களாகிய நாங்கள் செய்திருக்கிறோம். இதற்காக நாங்கள் எப்போதும் பெருமைப்படுகிறோம்! இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை அங்குள்ள சிங்கள இனவெறியர்கள், இனியும் தாக்காமல் இருப்பதற்கு இது போன்ற எதிர்வினைகளே எச்சரிக்கை வழங்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்! திருப்பி அடிப்பது தான் தலைச்சிறந்த தற்காப்பு! ============================== தலைமைச் செயலகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. ==============================

0 கருத்துக்கள் :