தீக்குளித்த மணி உயிரிழந்தார்

4.3.13

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூரில் 04.04.2013 திங்கள்கிழமை காலை தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்தவர். இவருக்கு சுலக்சனா என்ற மனைவியும், ஸ்ரீமதி என்ற மகளும், ஸ்ரீதர், ஸ்ரீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :