புத்த பகவானால் திருப்பியனுப்பப்பட்ட நபர்!

16.3.13

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணியொருவர் புத்த பகவானின் உருவங்களை கைகளில் பச்சைக்குத்தியிருந்தமையால் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 43 வயதான பிரான்சிஸ் என்ற நபரே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று நண்பகல் 1.12 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார் யுல்504 என்ற விமானத்தில் இலங்கை வந்துள்ளார். இவரது இருகைகளிலும் புத்த பகவானுடைய உருவம் பச்சைக்குத்தப்பட்டிருந்ததையடுத்து அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பச்சைகுத்துவது தனது தனி நபர் உரிமை என அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். எனினும் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அதிகாரிகள் இலங்கையில் இத்தகைய விடயங்களை அனுமதிக்கமுடியாதெனக் கூறி அவர் வருகை தந்த விமானத்திலேயே லண்டனுக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

0 கருத்துக்கள் :