மீனவர் மீது துப்பாக்கிச் சூடு! மீண்டும் அட்டூழியம்

7.3.13


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2.03.2013 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 06.03.2013 அன்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து செண்பககுமார் கூறியதாவது, இந்திய கடல் பகுதியில் கோடியக்கரையில் இருந்து 18 மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்களின் வலைகளை அறுத்து எரிந்து, சரமாரியாக சுட்டனர் என்றார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :