மனித புதைக்குழியொன்று வாகரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

23.3.13


மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் மனித எச்சங்கள் கொண்ட புதைக்குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பணிச்சங்கேணி எல்லத்தீவு பகுதியில் விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு இன்று காலை அடிக்கல் நடுவதற்கான குழி வெட்டும்போதே இந்த புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழி வெட்டும்போது மனித எலும்புக்கூடுகள் தென்படுவதைத் தொடர்ந்து அது தொடர்பில் வாகரை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகரை பொலிஸார் குறித்த பகுதியில் இடம்பெற்றுவரும் வேலைகளை நிறுத்தியுள்ளதுடன் குறித்த பகுதிக்கு பாதுகாப்பும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :