கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்: தங்கபாலுவுக்கு செருப்பு வீசினர்

10.3.13

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் அருகே மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு காங். கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு சந்தித்து தனது ஆதரவினை தெரிவிக்க வ்நதார். அப்போதுஅங்கிருந்த சில தமிழ் உணர்வாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களை சந்திக்க விடாமல் தடுத்தனர். அதனை மீறி தங்கபாலு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தபோது அவர் மீது சிலர் கற்களையும், செருப்புக்களையும் வீசினர்.இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

0 கருத்துக்கள் :