தமிழக அகதி முகாமில் குழந்தையுடன் பங்கேற்ற ஈழத் தாயின் நெஞ்சை உருக வைக்கும் போராட்டம்!

21.3.13

இன்று காலையில் சிங்கள இனவாத அரசுக்கு எதிராக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் முகாமில் 202 குடும்பங்களை சேர்ந்த 872 பேர் (ஒரு வயது குழந்தை முதல் 73 வயது முதியவர்கள் வரை) பட்டினி போராட்டம் நடத்தினர். ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தையுடன் பங்கேற்ற தாய் ஒருவரும் பங்கேற்றார். குழந்தையிடம் குடிக்க கொடுத்திருந்த பால் புட்டியில் பாலுக்கு பதில் வெறும் தண்ணீர் இருந்தது. அவரிடம் கேட்டேன்..! நமது போராட்டத்திற்காக பச்சிளம் குழந்தையை பட்டினியாக வைப்பது பாவமில்லையா என்று? அவர் சொன்னது… இன்று மட்டும் தான் நானும் எனது மகனும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்… ஆனால் இவனைப்போல இருபதாயிரம் குழந்தைகள் ஈழத்தில் பாலுக்கு வழியின்றி இறந்து போயுள்ளனர்… அதனால் இவன் ஆறு மணி நேரம் பட்டினி கிடப்பதால் ஒன்றும் ஆகிவிடாது…

0 கருத்துக்கள் :